BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா?
கொரோனா தொற்று சீனாவை பிறப்பிடமாக கொண்டது. நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.அந்த வகையில் மக்கள் முதல், இரண்டு என்ற அலைகளை கடந்து தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.இன்றளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல வாழ்வாதாரத்தை நடத்த மக்களால் இயலவில்லை.மக்களும் பழைய நிலைமைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.தற்பொழுது மூன்று வகையான தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்த நிலையிலும் தொற்றின் பாதிப்பானது குறைந்தபாடில்லை.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 ஆயிரத்து 657 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தற்பொழுது தான் அனைத்து துறைகளும் திறக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் பாடங்களை பயின்று வருகின்றனர்.இந்நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க நேர்ந்தால் ஊரடங்கு போடப்படும் சூழ்நிலை ஏற்படும்.அதனால் மீண்டும் மக்கள் வாழ்வாதாரம் அடிமட்ட நிலைக்குப் போகும்.
அதனால் இதனை கண்டு பெருமளவு மக்கள் கவலையுற்று வருகின்றனர்.நேற்று தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 1432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக சென்னையில் மட்டும் 176 பேர் பாதித்துள்ளனர். ஆனால் பாதிப்பின் குறைவானது 1,2 என்ற கணக்கிலேயே காணப்படுகிறது.அதைப்போல் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
நேற்று 25 பேராக இருந்த உயிரிழப்பு இன்று ஒரு நாள் மட்டும் 27 பேர் என்று அதிகரித்துள்ளது.அந்த வகையில் பார்க்கும் பொழுது கொரோனா தொற்று மீண்டும் ருத்ர தாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துள்ளது.தற்பொழுது உள்ள முதல்கட்டதிலேயே மக்கள் விழிப்புணர்வுடன் தனிமனித இடைவேளியை கடைப்பிடித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் பேராபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.அதேபோல அரசாங்கம் கூறும் அனைத்து விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமும் நாம் அனைவரும் இந்த தொற்றிலிருந்து விடுபட முடியும்.