Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!!  

Breaking: Child rapist sentenced to death!! The drastic decision of the court!!

Breaking: Child rapist sentenced to death!! The drastic decision of the court!!

Breaking: குழந்தையை கற்பழித்தவருக்கு மரண தண்டனை!! நீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவு!!

தற்பொழுது பெண்களுக்கு எதிராக பல வன்முறைகள் ஒவ்வொரு இடங்களிலும் நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே குறைந்து வருகிறது. பெற்றோர்கள் நம்பி அனுப்பும் பள்ளிகள் கல்லூரிகளிலேயே தற்பொழுது பாலியல் தொல்லைகளை மாணவிகள் சந்திக்க வேண்டி உள்ளது. பல சட்டங்கள் இதற்கென்று வந்தாலும் கடுமையான தண்டனைகள் வரும் வரை பாலியல் ரீதியான குற்றங்கள் ஒருபோதும் குறையாது.

அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிட்டலூர் மண்டல் என்ற மாவட்டத்தில் கடந்த ஆண்டு, 7 வயது மிக்க சிறுமி பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்டு சாக்கடை ஒன்றில் பிணமாக கண்டறியப்பட்டார்.இவரை யார் கொன்றார்கள் என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்ததில் அச்சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் இவருடைய நெருங்கிய உறவினரே அதற்கு காரணம் என்று தெரியவந்தது.சித்தையா என்பவர் பல நாட்களாக அந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை என தெரிந்த சித்தையா அந்த குழந்தையிடம் ஆசை வார்த்தைகளை கூறி அழைத்துள்ளார்.அவ்வாறு அழைத்ததும் உறவினரை நம்பி சென்ற சிறுமியை சித்தையா பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தை குறைக்க அங்கிருந்த பொருளைக் கொண்டு அச்சிறுமியின் தலையில் சித்தையா அடித்துள்ளார்.

அவ்வாறு அடித்ததில் அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.போலீசாரின் விசாரணைக்கு பிறகு இந்த உண்மை வெளிவந்ததையடுத்து சித்தையா போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது விசாரணை செய்யப்பட்டு முடிவு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஏழு வயது சிறுமி என்று கூட பாராமல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டதால் சித்தையாவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.பல பாலியல் வழக்குகளை தினந்தோறும் சந்தித்து வரும் இந்த வாழ்க்கை முறையில் இவ்வாறான தீர்ப்புகள் குற்றங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version