Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பமாகும் வகுப்புகள்.. வெளிவந்த முக்கிய தகவல்!!
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வானது வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நீட் தேர்வு எழுத கிட்டத்தட்ட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான பொது தேர்வுகள் நடைபெற்றதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தும் இலவச நீட் பயிற்சி வகுப்பானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மேற்கொண்டு அனைத்து வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் முடிவடைந்து விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வும் நெருங்கிக் கொண்டு வரும் நிலையில் மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பை தொடங்குவதாக தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு மாவட்டத்திலும் கிட்டத்தட்ட 128 பயிற்சி மையங்கள் அமைத்து மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த பயிற்சி வகுப்பு எடுப்பதற்கென்று பிரத்தேக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த வகுப்பானது வாரத்தில் ஏழு நாட்களும் நடைபெறும்.மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு தேநீர் என அனைத்தும் வழங்கப்படுகிறது.வார இறுதி நாளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முன்மாதிரியான பயிற்சி தேர்வும் நடத்தப்படுகிறது.
பொதுத்தேர்வு நடைப்பெற்ற காரணத்தினால் இடைப்பட்ட நாட்களில் இந்த நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள் அதகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்று தமிழக அரசு இவ்வாறன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.