BREAKING: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கைது!

0
168
Minister Vijayabaskar in person! Anti-Corruption Department's investigation has begun!

BREAKING: முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர் .விஜயபாஸ்கர் கைது!

திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியுள்ளது. தனது ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதமாக அதிமுக அமைச்சர்களிடம் காட்டிவருகிறது. அதிமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்பு நடைபெற்ற ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் என்று கூறினர். அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தி வருகிறது. அவ்வாறு முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடத்தியதில் எம் .ஆர் விஜயபாஸ்கரும் ஒருவர் ஆவார்.

இவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடைபெற்ற சோதனையில் தெரிவித்தனர்.அவர் மீது வழக்கு பதிவும் செய்தனர்.மேலும் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி எம்.ஆர் விஜயபாஸ்கரை நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்மன் அனுப்பினர்.ஆனால் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் முடியும் வரை நேரில் ஆஜராக முடியாது என எம் .ஆர் விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.அதனையடுத்து தற்பொழுது வரும் 25ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.அதனைக்கண்டித்து முன்னால் அமைச்சர் எம் .ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலை தள்ளி வைப்பதாக கூறி விட்டு அதிகாரி வெளியே வந்தவுடன் அவரது வாகனத்தை அதிமுகவினர் அனைவரும்  முற்றுகையிட்டனர்.இதனால் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று கொண்டே இருந்தது. அதன் காரணமாக அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் எட்டு பேர் மற்றும் அதிமுக தொண்டர்கள் 100 பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.