Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Breaking: Free laptop for school students! Action announcement released by the Chief Minister!

Breaking: Free laptop for school students! Action announcement released by the Chief Minister!

Breaking: பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

புதுச்சேரியில் கல்வித் துறை சார்பாக மாணவர்கள் நாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அதன்பின் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அதில், கல்வித்துறைக்கு மட்டும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த நிதியானது பெருமளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பள்ளிகள் இல்லாத இடங்கள் என்று எதனையும் குறிப்பிட்டு கூற முடியாது. ஏனென்றால் தனியார் பள்ளிகளுக்கு ஈடாகவே அரசு பள்ளிகளும் உள்ளது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தற்போது கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள் வேறு எங்கும் செல்ல தேவையில்லை.

அந்த அளவிற்கு உயர் கல்வியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஏழை குழந்தைகள் கூட மருத்துவர்களாக உள்ளனர். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தி படித்து முன்னேற வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு  கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். அரசு பணி கிடைப்பதற்காக மட்டுமே படிக்க நினைக்கக் கூடாது, அறிவை வளர்த்துக் கொள்ளவும் படிக்க வேண்டும்.

அதேபோல கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அடுத்த கட்ட நிலைக்கு தங்களை தாங்களே தயார் படுத்திக் கொள்ள வேண்டும். படிக்கும் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் மாணவர் மற்றும் மாணவிகள் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். அந்த வகையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடி கணினி மற்றும் இலவச மிதிவண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version