Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

Breaking: திமுக-வுடன் கைகோர்த்த அதிமுக-வின் முக்கிய புள்ளிகள்! வேதனையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்!

அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் இரு தரப்பினர் கிடையே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு பக்கம் கொடநாடு கொலை வழக்கு மறுபக்கம் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை என அடுத்தடுத்து அடிகளாகவே அதிமுக-விற்கு உள்ளது.இவ்வாறு அதிமுக அதிருப்தி நிலை இருக்கும் வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.

முன்னாதாகவே மாஜி அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கிய நிலையில்,எடப்பாடி உதவுவார் என்று எண்ணினர்.ஆனால் தற்பொழுது அவருக்கு இருக்கும் அழுத்தத்தில் அவரால் அதனை கண்டுக்கொள்ள முடியவில்லை.தற்பொழுது ஒற்றை தலைமை போட்டி உட்கட்சி மோதல் நடக்கும் இந்த நிலையில் இது அதிமுகவிற்கு பெரும் அடியாக தான்  உள்ளது.

இன்று திமுக அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் முன்பு முன்னாள் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ விஜயபாலன், சீர்காழி தொகுதி முன்னாள் எம் எல் ஏ மூர்த்தி மற்றும் நாகை மாவட்டம் அம்மா பேரவை துணை செயலாளர், பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். இவர்களோடு அதிமுக ஒன்றிய தலைவர் ரமேஷ் செல்வராஜ் சுரேஷ்குமார் ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இவர்கள் அதிமுகவில் இருந்து தற்போது திமுகவில் இணைந்தது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version