Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking:கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்! வசமாக சிக்கும் மாவட்ட ஆட்சியர்!

Breaking: Important twist in Kallakurichi Smriti case! The district collector who gets caught in the trap!

Breaking: Important twist in Kallakurichi Smriti case! The district collector who gets caught in the trap!

Breaking:கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் முக்கிய திருப்பம்! வசமாக சிக்கும் மாவட்ட ஆட்சியர்!

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கானது தமிழகத்தையே புரட்டி போட வைத்தது. ஸ்ரீமதி எவ்வாறு மேல் தளத்திலிருந்து கீழே விழுந்தார்? அவ்வாறு செல்லும் வரை அங்குள்ள காப்பாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகள் அடுக்கடுக்காக இருந்து வந்தது. மேலும் அப்பள்ளியின் நிர்வாகத்தின் உரிமையாளர் தான் ஸ்ரீமதிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த தினத்திலிருந்து மூன்று நாட்கள் கழித்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமதி தற்கொலை குறித்து பள்ளியில் போராட்டம் நடத்தினர்.பலரும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டு பள்ளியை சூறையாடினர். அங்கிருந்த பேருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என அனைத்தையும் தீ வைத்து எரித்தனர். இதில் பலர் போராட்டக்காரர்களாக இருந்தாலும் ஒரு சிலர் அங்குள்ள பொருள்களை களவாடவே கூட்டத்தோடு கூட்டமாக நுழைந்தனர்.

இவ்வாறு இருந்த நிலையில் அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவ்வாறு சிறையில் அடைத்ததில் முக்கிய குற்றவாளியாக விஜய் என்பவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு விஜய்யின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. விஜயின் மனைவி தரப்பில், எனது கணவர் எந்த ஒரு கலவரத்தையும் ஏற்படுத்தாத போது, ஒரே ஒரு வழக்கை வைத்து மட்டும் எப்படி குண்டர் சட்டம் போட முடியும் என்று கேட்டுள்ளார். மேலும் இவருடைய ஜாமின் மனுவும் தற்பொழுது நிலுவையில் உள்ளது. இவர் ஜாமினில் விடுதலையாவதை தடுக்கும் வகையில் பல நடைமுறைகளை மறைமுகமாகவே பின்பற்றியுள்ளனர்.

குறிப்பாக குண்டர் சட்டம் இயற்றப்பட்ட உத்தரவு நகலானது ஆங்கிலத்தில் மட்டுமே இவருக்கு வழங்கியுள்ளனர். அதனை மொழிபெயர்த்து தமிழில் வழங்கவில்லை. ஆங்கிலம் தெரியாத இவரிடம் தமிழில் மொழி பெயர்த்து தர வேண்டும். இதை அனைத்து வைத்து பார்க்கையில் இவர் வெளியே வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட திட்டமாக உள்ளது. எனவே விஜய் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version