Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking ‘எந்த தேர்வும் கிடையாது’… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

School

School

தமிழகத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வு காரணமாக ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலால் ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டதை கருத்தில் கொண்டு, 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்வுகள் இன்றி தேர்ச்சி சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை பள்ளி மாணவ, மாணவிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று 3 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையில்,‘9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிவிப்பை திரும்ப பெற உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த படி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்தார்.

Exit mobile version