Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

#BREAKING | விருதுநகர் : காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து! சிதறிய மனித உடல்கள்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்குவாரியில் நேரிட்ட இந்த வெடி விபத்தில் மேலும் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கல்குவாரியில் இன்று காலை பாறை உடைக்கும் பணியின் போது நேர்ந்த இந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கல்குவாரி வெடி விபத்து சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின்போது மக்கள் குரல் எழுப்பினர்.

தொழிலாளர் தினமான இன்று இப்படி ஒரு கோர விபத்து நடந்திருப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து

Kariyapatti Fire Accident

இதற்கிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியான அந்த சிசிடிவி காட்சியில் சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்தால் ஏற்படும் எப்படி இருக்குமோ அப்படி இருப்பதை உணர்த்துகிறது.

ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளால் நடக்கும் வெடி விபத்துக்கள் பல உயிர்களை பலிவாங்கிவரும் நிலையில், இன்று கல்குவாரியில் நடந்த வெடி விபத்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றி, மக்களின் உயிரை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைத்துள்ளனர்.

Exit mobile version