Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking: இடமாற்றம் செய்யப்பட்ட “12 ஐபிஎஸ்” அதிகாரிகள்!

இன்று தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அதிகாரிகள் தற்போது உள்ள கொரோனா காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

 

எந்த அதிகாரிகள் இந்த பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்கள் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு வருமாறு.

 

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது,

 

1. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டு உள்ளார்.

2. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

3.காவல்துறை கணினிமயமாக்கல் எஸ்.பியாக இருந்த வருண்குமார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. காவல்துறை ஏடிஜிபியாக(செயலாக்கம்) இருந்து வந்த ஏ.கே. விஸ்வநாதன், காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. தீயணைப்புத்துறை டிஜிபியாக கரண் சிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சமூக நீதி மற்றும் மனித உரிமையின் கூடுதல் டிஜிபியாக ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சென்னை தலைமையகத்தின் கூடுதல் டிஜிபியாக அமல்ராஜ் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

9. சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி-யாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

10. காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபி-யாக சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

Exit mobile version