BREAKING NEWS# திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்கு பதிவு! தொடரும் தொண்டர்களின் அட்டூழியம்!
வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு பலவித அறிக்கைகளையும் கூறி வருகின்றனர்.பலவகைகளில் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.அதிக அளவு பறக்கும் படையினர் வைத்து கண்காணித்து மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வில்லை.
இன்று மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான கணக்கில் வராத பணங்களை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.நேற்று கையும் களவுமாக அதிமுகவினரின் லஞ்சம் வீடியோ சிக்கியது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் திமுக தலைவர் சென்னையில் பிரச்சாரம் செய்தபோது அங்கு அவருக்கு பலத்த ஏற்பாடுகள் செய்தனர்.அதில் போஸ்டர்கள்,பேனர்கள் என ஒட்டப்பட்டு பாட்டசுகள் வெடித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.
அப்போது வீட்டின் மேல் வான வேடிக்கைகளை வெடித்து வந்தனர். எதிர்பாராத வகையில் அனைத்து பட்டாசுகளும் ஒன்று பட்டு எரிந்து மாடியே தீ பற்றி எரிய ஆரம்பித்தது.ஆப்போது போலீசார் உட்பட ஆறு பேருக்கு தீ காயம் ஏற்பட்டது.இவர்களின் அட்டூழியம் ஆட்சிக்கு வரும் முன்னே ஆரம்பித்துவிட்டது.
அதேபோல் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் திமுகவினர் பிரச்சாரம் செய்யும் போது தேர்தல் விதிமுறைகளை மீறி கூட்டமாக சென்றுள்ளனர்.சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் முகக்கவசம் அணியாமலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இருந்ததால் அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.அந்த 1000 தொண்டர்கள் மற்றும் அவர்களுடன் சேர்த்து தலைவர் மீதும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
திமுகவினரின் அராஜகம் நாளுக்குநாள் தொடர்ந்து கொண்டே இருப்பதாக மக்கள் பேசி வருகின்றனர்.இரு கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதற்காக பல தில்லு முல்லுகளை செய்து வருகிறது.