Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 # Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்!

# Breaking news : மீண்டும் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு!ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்!

சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை ரூ 41,000 கடந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சம். வரலாறு காணாத உச்சம் என நிபுணர்கள் அறிவிப்பு.

இன்று காலை தொடங்கியதும் ஆபரண தங்கத்தின் விலை ரூ 224 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41, 424 க்கு விற்கப்படுகிறது.

கடந்த ஆறு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.10,850 உயர்ந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டும் ரூ.3,584 வரை உயர்ந்துள்ளதாக தகவல்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலக அளவில் அனைத்து பொருளாதாரமும் முடங்கிய நிலையில் இத்தகைய உயர்வு ஏற்பட்டுள்ளது என தகவல்.

அமெரிக்க டாலரின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதால் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்வு.

ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்.

 

Exit mobile version