#Breaking News: S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு நாளை ‘ஹால்டிக்கெட்’!

0
140

#Breaking News: S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு நாளை ‘ஹால்டிக்கெட்’!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்’நாளை முதல் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(15.09.2020) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் S.S.L.C., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட பிளஸ்-1 வேதியியல், புவியியல், கணக்கு பதிவியியல் தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் 15-ந்தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். கடந்த 26-3-2020 அன்று கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் இணைய தளத்திற்குச் சென்று HallTicket என்ற வாசகத்தை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் “HSE SEPTEMBER 2020 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தை கிளிக் செய்து அடுத்த தோன்றும் பக்கத்தில் உங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து அவர்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ்-1 அரியர் மற்றும் பிளஸ்-2 துணைத் தேர்வுகள் இரண்டையும் எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

தேர்வுகளுக்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.