Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

0
338
Breaking: Now you can study medicine in Tamil too!! Governor's announcement!!

Breaking: இனி தமிழ் மொழியிலும் மருத்துவம் படிக்கலாம்!! ஆளுநர் வெளியிட்ட அறிவிப்பு!!

மத்திய அரச தேர்வு மற்றும் இதர துறைகளில் ஹிந்தியை கட்டாயம் ஆக்குவதை பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர். இச்ச சமயத்தில் பிரதமரின் கனவு திட்டமான மருத்துவ மற்றும் பொறியியல் ஆகிய படிப்புகள் தாய் மொழியான ஹிந்தியில் கற்பிக்கப்படுவது நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது.மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை மத்திய இந்த ஆண்டு முதல் மாணவர்கள் ஹிந்தியில் படிக்கலாம் எனக் பிரதேசத முதல்வர் கூறியுள்ளார்.

மேலும் பாட புத்தகத்தில் இடம் பெறும் முக்கியமான சொற்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கும் என கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது தமிழக மற்றும் புதுச்சேரியில் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகள் தமிழில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சு அடிப்பட்டு கொண்டிருக்கிறது.இந்த நிலையில் தமிழில் மருத்துவ படிப்பை கொண்டுவர பரிந்துரை செய்வதாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் மூத்த குடி மக்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் விழா ஒன்று நடைபெற்றது.

இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை கலந்து கொண்டார். பின்பு செய்தாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியது, மற்ற மாநிலங்களைப் போல புதுச்சேரியில் கூடிய விரைவிலேயே மருத்துவ படிப்பு தமிழில் கொண்டுவர முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்யப்படும். முழுமையாக தமிழ் முறையில் மருத்துவ படிப்பு கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பம் உள்ளவர்கள் தமிழில் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதுமட்டுமின்றி தமிழில் மருத்துவ படிப்பிற்கான புத்தகங்கள் அச்சிடப்பட ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான முயற்சியை நான் 20 வருடங்களுக்கு முன்பே எடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி நான் ஒரு மருத்துவர் என்ற விதத்தில் தாய்மொழியான தமிழில் மருத்துவப் படிப்பை தொடர அதற்கான முயற்சிகள் அனைத்தையும் கொண்டுவர வழி செய்வேன். இவரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.