Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

BREAKING: Shocking news for students! Chennai High Court orders!

BREAKING: Shocking news for students! Chennai High Court orders!

BREAKING: மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

கொரோன காலக்கட்டத்தில் மக்கள் அனைவரின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 4மாதங்களுக்கு மேல் ஊரடங்கு போடப்பட்டது.அப்போது மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது.அதன்பின் கல்லூரியில் அரியர் தேர்வுகள் மற்றும் இதர தேர்வுகளை தமிழக அரசாங்கம் ஆள் பாஸ் செய்தது.அதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கும் 10 மற்றும் 11- ம் வகுப்புக்கான தேர்வுகளையும் ரத்து செய்து ஆள் பாஸ் செய்தது.

தேர்வின்றி ஆள் பாஸ் செய்ததால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் அரியர் தேர்வுகள் ஆள் பாஸ்  செய்யக்கூடாது,மீண்டு தேர்வு நடத்தும்படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.அதில் உயர் நீதிமன்றம் கூறியது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது ஏற்க இயலாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.அரியர் வைத்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த பரிசீலனை செய்ய வேண்டும் என கூறினர்.அதுமட்டுமின்றி தேர்வு நடத்த தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து யோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்?தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என பல்கலைக்கழகம் வாரியாக முழு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்  நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.அந்தவகையில் இந்த அரியர் தேர்வுகள் மே மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.அதுமட்டுமின்றி இத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version