ஸ்டெர்லைட் ஆலைக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்த உச்சநீதிமன்றம்!

0
168

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. அதோடு ஆக்சிஜன் இல்லாமல் அந்த நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் .ஆகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில் தூத்துக்குடி பகுதியில் மூடப்பட்ட இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நிபந்தனைகளுடன் தொடங்குவதற்கு அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வரையில் ஆக்சிஜன் தயார் செய்யலாம் என்றும், அதன்பின்னர் அப்போது இருக்கும் சூழ்நிலையை பொருத்து தேவைப்படும் ஆனால் மறு ஆய்வு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆக்சிஜன் தயாரிப்பு பணிகளை மேற்பார்வை இடுவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும், தாமிர உருக்கு ஆலை பிரிவுக்குள் யாரும் நுழையக் கூடாது எனவும் நீதிபதிகள் கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.