Breaking: தனியார் மட்டுமின்றி அரசு மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! மாவட்ட ரீதியாக பறக்கும் படை.. அலார்ட்!!
கொரோனா தொற்று, டெங்கு உள்ளிட்ட தொற்றுகளை அடுத்து தற்பொழுது எலிகாச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இதனை கண்டறியும் லெப்டோ ஸ்ப்ரைரோஸிஸ் என்ற ஆய்வகத்தின் வேலைகள் நடைபெற்று வந்தது. இன்று அந்த ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். மேலும் அங்கிருந்த நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது வரை இந்தியாவில் மொத்தம் பத்து இடங்களிலேயே இந்த எலி காய்ச்சலை கண்டறியும் ஆய்வுக்கூடம் உள்ளது.
தற்பொழுது முதல் முறையாக தமிழகத்திலும் ஆரம்பித்துள்ளோம். இந்த ஆய்வகம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு வரை எலிசா என்ற பரிசோதனை மூலமே எலி காய்ச்சலை கண்டறிந்து வந்தோம். ஆனால், இனிவரும் நாட்களில் லிப்டோஸ் பைரோசிஸ் ஆய்வகம் மூலம் எலி காய்ச்சலை கண்டறியலாம். எலிக்காய்ச்சல் என்பது, எலிகளிடமிருந்து எளிதாக மனிதர்களுக்கு பரவும் ஒரு வித தொற்று நோய். இந்த தொற்று வந்துவிட்டால் நமது உடலின் சிறுநீரகம், நுரையீரல் போன்றவற்றை தான் முதலில் பாதிக்கும்.
இந்தியாவில் மட்டும் வருடம் தோறும் ஒரு லட்சம் பேரில் 10 பேர் இந்த தொற்றால் பாதிப்படைந்து விடுகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் செருப்பு இன்றி வெறும் கால்களில் நடப்பதால் இத்தொற்று எளிதாக பரவி விடும். இது வந்து விட்டால் காய்ச்சல், கண் எரிச்சல், கண் சிவந்து போகுதல் ஆகிய அறிகுறிகள் முதலில் காணப்படும். மேற்கொண்டு நிருபர்கள் கால்பந்து விளையாட்டு வீராங்கனை கால் அகற்றியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது, மருத்துவர்கள் வீராங்கனைக்கு கால் அகற்றியது முறையான சிகிச்சை தான் எனக் கூறுகின்றனர். இதற்கென்று தனியாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கவன குறைவு ஏதேனும் நடைபெற்று இருந்தால் இந்த விசாரணை குழு கண்டறியும் என தெரிவித்தார். இதனையடுத்து அனைவருக்கும் எச்சரிக்கும் வகையில், காலாவதியான மருந்து மாத்திரைகளை வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது.
இனிவரும் நாட்களில் துறை ரீதியாக அதிகாரிகள் அமைத்து மருந்து மாத்திரைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். தமிழகத்தின் உள்ள அரசு மற்றும் தனியார் மருந்தகங்களில் காலாவதியான மருந்துகள் குறித்து இனி ஆய்வு செய்யப்படும். அது மட்டும் இன்றி பல மாவட்டங்களிலும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். அதனை தடுக்கும் விதத்தில் மாவட்டம் வாரியாக பறக்கும் படை நியமிக்கப்படும் என தெரிவித்தார். இவர் கூறியது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருந்தகங்களை முன்கூட்டியே எச்சரிப்பது போல உள்ளது.