Breaking: தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

0
192

Breaking: தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

வங்க கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதன் எதிரொலியாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

கனமழையின் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு நேற்றிரவே விடுமுறை அறிவித்த நிலையில், மேலும் 14 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி கடலூர் அரியலூர் விழுப்புரம் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை செங்கல்பட்டு வேலூர் தஞ்சாவூர் திருவாரூர் நாகை மயிலாடுதுறை பெரம்பலூர் திருவண்ணாமலை சேலம் திருச்சி கள்ளக்குறிச்சி ராமநாதபுரம் புதுக்கோட்டை மதுரை ஆகிய 21 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 -ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.