கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் திருப்புமுனை!! உயர் நீதிமன்றம் கேள்வி!!

0
123
Breakthrough in Kallakurichi poisoning case!! High Court Question!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரியபோது பல சர்ச்சைகள் ஏற்பட்டன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் புட்டு வெளிவந்த விடும் என்றெல்லாம் தெரிவித்தனர். அப்போது பலரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய பெரும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இது தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் சென்னை உயர்நீதிமன்றம், கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க உச்சரித்துள்ளது. ஏற்கனவே, கைதானவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் குண்டர் சட்டத்தின் படி சிறை தண்டனை அனுபவித்து வந்தனர். இதற்கு மேலும் குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதற்கு என்ன தேவை? என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் ஆறு மாத காலம் சிறையில் அடைத்து வைத்த நிலையில், மேலும் சிறையில் வைத்திருப்பதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பி உள்ளது உயர்நீதிமன்றம்.