கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி

0
84

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு ₹7500 கோடி கடன் வழங்கிய வங்கி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு நிறுவனம் BRICS (பிரிக்ஸ்).

2012ம் ஆண்டு இந்தியா BRICS சார்பில் வளர்ச்சி வங்கியை உருவாக்க முன் மொழிந்தது. அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி உருவானது. தற்போது அது புதிய வளர்ச்ஸ்க் வங்கி என்று அழைக்கப்படுகிறது. .சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தலைவராக, KV காமத் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்காக, வங்கிக் கடனை வழங்கி வருகிறது (பிரிக்ஸ்).

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது பிரிக்ஸ்.

இது குறித்து, ப்ரிக்ஸ் வங்கியின் துணைத் தலைவர், ஜியான் ஜு “கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பு காலங்களில், அவசர உதவி கடன் திட்டத்தின் கீழ், உறுப்பு நாடுகளுக்குக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வகையில், இந்தியாவுக்கு,கொரோனா பரவல் தடுப்பு, நிவாரணம், சமூக, பொருளாதார திட்டங்களுக்கு, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.