கல்யாணத்திற்கு முன் இதை போடுங்க! நல்லா பளிச்சென்று மின்னுவிங்க!

0
205

கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் பொழுது இந்த முறையை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்.

தேவையான பொருட்கள்:

1. பயத்தம் பருப்பு 2 ஸ்பூன்

2. மைசூர் பருப்பு 2 டீஸ்பூன்

3. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்

4. துளசி இலை பொடி ஒரு ஸ்பூன்

5. வேப்பிலை பொடி ஒரு ஸ்பூன்

செய்முறை:

1. தேவையான அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2. பொடியை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.

3. பெண்கள் இதை பயன்படுத்தும் பொழுது இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் போட்டுக் கொள்ளலாம்.

முதலில் இந்த பொடியை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

முகம் மற்றும் கை கால்களில் தேங்காய் எண்ணெய்/ நல்லெண்ணெய்/ பாதாம் எண்ணெய் ஆகிய ஏதாவது ஒன்றை நன்றாக தேய்த்துக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து, தயார் செய்து வைத்த கலவையை தேய்த்து குளிக்கலாம். இதை பயன்படுத்தும் பொழுது சோப்பு உபயோகப்படுத்த வேண்டாம்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை செய்து வாருங்கள் ஒரே வாரத்தில் உங்களுக்கு பலனளிக்கும்.

மற்ற நாட்களில் தேங்காய் எண்ணெய்/ பாதாம் எண்ணையை பூசி அரை மணி நேரம் கழித்து சோப்பு உபயோகப்படுத்திக் குளிக்கலாம்.

இவ்வாறு செய்து வந்தால் உங்களது முகம் பளபளப்பாக மின்னும் அழகை பெரும்.