அம்பத்தூரில் தன்னுடைய தாய் மாமா வீட்டிலிருந்து ஐடி இல் பணிபுரிந்து வந்த நிவேதா (27) என்ற பெண் திருமணமாக ஒரு வாரமே உள்ள நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
நிவேதாவின் உடைய தந்தை 24 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய தாயாரும் கொரோனா காலகட்டத்தில் உயிர் இழக்கவே நிவேதா மற்றும் அவருடைய சகோதரர் தங்களுடைய தாய் மாமா வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், 1 வருடத்திற்கு முன்பு நிவேதாவிற்கும் தண்டையார்பேட்டையில் வசித்து வந்த ராஜேஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.
நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணமகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நிவேதாவின் சகோதரர் காவல் துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், நிவேதாவினுடைய சகோதரர் சந்திரபாபு அளித்த புகாரின் பெயர்கள் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை துவங்கினர்.
அப்பொழுது, திருமணம் குறித்து ஏற்பட்ட மன அழுத்ததாலும் திருமணத்திற்கு பின் கணவருடைய வீட்டில் சென்று வாழ வேண்டும் என்றும், அங்குள்ள வீட்டு வேலை சமையல் வேலை போன்றவை தனக்கு தெரியாது என்றும் சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் இவருக்கு மனநிலை சிகிச்சை அளிப்பதற்காக மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றதாகவும் நிவேதாவினுடைய சகோதரர் சந்திரபாபு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இப்படி ஒரு மன அழுத்தத்தில் இருந்த நிவேதா தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்று அங்கு இருந்து அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.