திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

0
138

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

தெலங்கானாவில் திருமணம் ஆன அடுத்த நாளே மணமகன் இறந்தது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு கடந்த 13 ஆம் தேதி வியாழக் கிழமை திருமணமும் அதற்கு முந்தைய நாள் வரவேற்பும் நடந்துள்ளது. திருமணம் நடக்கும் போதே மிகவும் சோகமாக இருந்த அவர் சனிக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். மேலும் மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு வந்ததுதான் என சொல்லியுள்ளனர்.

மருத்துவர்கள் கூறியதைக் கேட்ட கணேஷின் குடும்பத்தினர் மற்றும் புது மனைவி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தங்களது மகனின் மரணம் தொடர்பாக பேசிய கணேஷின் பெற்றோர்,  வரவேற்பின் போது பாடல்கள் என்ற பெயரில் இரைச்சல் அதிகமாக இருக்கும் வண்ணம் பாடல்கள் ஒலிபரப்பப் பட்டன. அதைக் கேட்டதில் இருந்துதான் அவன் களைப்பாகவும் பதற்றமாகவும் காணப்பட்டான் எனக் கூறியுள்ளனர்.

உறுதியாக அதுதான் மாரடைப்பு வந்ததற்கு காரணம் என சொல்ல முடியாது என்றாலும், திருமண வீடுகளில் இதுபோல அளவுக்கு அதிகமாக பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் குழந்தைகள் முதியவர்கள் என அனைவருமே பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.