இன்று பலரது வீடுகளில் தவிர்க்க முடியாத மின் சாதனங்களில் ஒன்றாக பிரிட்ஜ் உள்ளது.உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்கவும்,உணவுப் பொருட்கள் பதப்படுத்தவும் பிரிட்ஜ் பயன்படுகிறது.ஆனால் சமீப காலமாக பிரிட்ஜ் வெடிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.பிரிட்ஜை முறையாக பராமரிப்பதன் மூலம் இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.
பிரிட்ஜ் பராமரிப்பு:
உங்கள் வீட்டு பிரிட்ஜிக்கு பின் பகுதியில் உள்ள கம்பிரசர் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரிட்ஜின் ப்ரீசர் பகுதியில் அளவிற்கு அதிகமாக பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.ப்ரீசரில் அதிக பொருட்கள் வைப்பதால் கம்பிரசர் சூடாகி வெடிக்கும் அபாயம் இருக்கிறது.
பிரிட்ஜை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.தினமும் குறைந்தது ஒருமுறையாவது பிரிட்ஜை திறந்து மூட வேண்டும்.நீங்கள் பிரிட்ஜை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் சுவிட்ச் ஆப் செய்து ஓய்வு கொடுக்க வேண்டும்.
அதேபோல் பிரிட்ஜை ஷிப்ட் செய்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் பிரிட்ஜ் சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும்.வாரத்திற்கு ஒருமுறை பிரிட்ஜை முழுமையாக சுத்தம் செய்ய வ வேண்டும்.பிரிட்ஜில் அழுகிய பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்தி விடவும்.
பிரிட்ஜை சுத்தம் செய்த கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.எலுமிச்சை சாறு,கல் உப்பு,வினிகர்,பேக்கிங் சோடா போன்ற பொருட்களை பயன்படுத்தி பிரிட்ஜை சுத்தம் செய்யலாம்.பிரிட்ஜின் ப்ரீசரில் படியும் ஐஸ்கட்டிகளை கரைந்து வெளியேற்ற வேண்டும்.
பிரிட்ஜின் கம்பரசரை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.முடிந்தவரை ஆறு மாத்திற்கு ஒருமுறை கம்பரசரை மாற்றுவது நல்லது.கம்பரசை மாற்றவில்லை என்றாலும் அதில் இருக்கும் கேஸை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்ற வேண்டும்.இதுபோன்ற வழிமுறைகள் மூலம் பிரிட்ஜை எளிமையாக பராமரிக்க முடியும்.