பைபர் நெட் பணியை மக்களுக்கு இடையூறின்றி செயல்படுத்துங்கள்! தகவல் தொடர்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை!

0
116
 பைபர் நெட் பணியை மக்களுக்கு இடையூறின்றி செயல்படுத்துங்கள்! தகவல் தொடர்பு துறை அமைச்சரிடம் கோரிக்கை!
தகவல் தொடர்புத் துறையின் ஊராட்சிகள் தோறும் இணையம் எனும் சிறப்பான திட்டத்திற்காக, இத்துறை சார்ந்த அலுவலர்களின் அலட்சியப் பணியினால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக _”போலீஸ் பொதுமக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினர்”_ மக்களின் சிரமத்தை போக்க வேண்டுமென தகவல்தொடர்பு துறையின் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் பார்வைக்கு சமர்பித்து வருகின்றனர்.
தேனிமாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், சீலையம்பட்டியிலிருந்து வேப்பம்பட்டி ஊராட்சிக்கு (வருஷநாடு செல்லும் வழி) செல்லும் பிரதான சாலையில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக கிராம ஊராட்சிகள் தோறும் இணைய வசதி ஏற்படுத்திட வேண்டி பைபர்நெட் (Fiber Net) ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டி,கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஊராட்சிகள் தோறும் இணைய வசதி எனும் தகவல் தொடர்புத் துறையின் சிறப்பான இப்பணிக்காக தோண்டப்படும் மண்ணை எடுத்து சாலையின் நடுவே மணல் திட்டு போல கொட்டி,கிராமத்து சாலைகளான இரு வழிப்பாதையில், ஒரு வழிப்பாதையை ஆக்கிரமித்து தோண்டி எடுக்கப்படும் மணலை திட்டு போல கொட்டி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்துடன் உயிர் பலி அச்சைத்தை ஏற்படுத்தி வருவதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.இப்பணிக்காக, குவித்து வைக்கப்படும் மண் குவியலால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கண்களை மணல் தூசிகள் மற்றும் துகள்கள் பதம் பார்த்து சிறு,சிறு விபத்துக்களும் அரங்கேறி வருகின்றன.
இது ஒருபுறமிருக்க,இரு வழிப்பாதையில் ஒரு வழிப்பாதையை ஆக்கிரமித்து தோண்டி கொட்டப்பட்டு வரும் மணல் திட்டுக்களால் போக்குவரத்திற்கான சிரமம் மிகுந்த இடையூறுகள் ஏற்படுவதாகவும், இதனால், வெளிச்சம் இல்லாத இரவு நேரங்களில் அவ்வழிப்பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு உயிர்ப்பலி அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் பேருந்து,லாரி மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உயிர்ப்பலி அச்சத்தோடு தங்களது வாகனங்ளை இயக்கும் அவல நிலைக்கு உள்ளாகி வருவதாகவும் செய்வதறியாது புலம்பி வருகின்றனர்.
மேலும்,Fiber Net இணைய வசதிக்காக தோண்டப்படும் பள்ளங்களால் வேப்பம்பட்டி, காமாட்சிபுரம், அழகாபுரி, சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட இன்னும் சில ஊராட்சிகளின் மக்கள் நலன் சார்ந்த குடிநீர் பைப் லைன்களும் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக தோண்டப்படுவதால் நிறைய இடங்களில் குடிநீர் பைப் லைன்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதோடு பொதுமக்களின் குடிநீர் தேவைகளும் தடைபடுவதாக சுற்று வட்டார பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுற்றுவட்டார, பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் வாகன ஓட்டிகளின் உயிர் நலனை கவனத்தில் கொள்ளாமல்,  எங்களது பணி முடிக்க,என்ன வேண்டுமானாலும் செய்வோம். என்கிற அலுவலர்களின் அஜாக்கிரதையினால் தோண்டப்படும் பணியினால் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்தில் ஆழ்த்தி வருகின்றனர்.
 அதனைத் தொடர்ந்து,ஒருசில இடங்களில் இப்பணியானது முடிவுற்ற நிலையில், தோண்டி வெளியே கொட்டப்பட்ட மணல் குவியலை சரியான முறையில், தோண்டுவதற்கு முன்பு இருந்தவாறு தார்சாலை தெரியும்படி சுரண்டி  அப்புறப்படுத்துவதில் அலட்சியப் போக்கை இப்பணி சார்ந்த அதிகாரிகள் கடைபிடித்து வருவதன் மெத்தனப் போக்கினால் பிரதான சாலையில் பரவிக் கிடக்கும் மண்துகள்களால் (மண் தூசிகள்) தற்போது தார்சாலை என்பதற்கான அடையாளம் தெரியாமல் இருந்து வருகிறது.
வேப்பம்பட்டி நாட்டாண்மை கண்மாய் ஒட்டிய சாலையிலிருந்து பூமாலைக்குண்டு மற்றும் தர்மாபுரி ஊராட்சிக்கு இணைய சேவை வேண்டி, சாலையின் வலது புறத்தில் தோண்டப்பட்ட மணல்களை சரிவர அப்புறப்படுத்தாமல் மண்துகள்கள் பாதி சாலையில் ஆக்கிரமித்து சிதறி இருப்பதே இதற்கு சாட்சி. அதற்கடித்தபடியாக, சீலையம்பட்டியில் இருந்து வேப்பம்பட்டிக்கு செல்லக் கூடிய பிரதான இரு வழிப் பாதையும் சாட்சி.
இப்பணி சார்ந்த அதிகாரிகளின் அலட்சியப் பணியினால், கனரக லாரி, பேருந்து,லாரி,கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்லும் போது  முறையாகச் சுரண்டி அப்புறப்படுத்தாத மணல் தூசிகளால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு மணல் தூசிகள் சிதறிப் பறக்கிறது.
 இதனால்,வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கண்களில் மணல் துகள்கள் (தூசிகள்) பட்டு நிலை தடுமாற்றம் அடைந்து எதிர்பாராத விபத்துக்கள் அரங்கேறி வருகின்றது என இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
தோண்டப்பட்டு பணி முடிந்த பின்பு குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை JCB இயந்திரம் மூலம் வாரி பள்ளைத்தை மூடும் இப்பணியால் நல்ல நிலையில் உள்ள சாலைகள் சேதாரமுற்று உடைபடுகின்றன.
சாலைகள் சேதாரம் அடைவதோடு மட்டுமல்லாமல், மணல் துகள்களும் சரிவர வாரி அப்புறப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்போது ஆடி மாத சூறைக்காற்றுடன் அவ்வப்போது பெய்யும் மழையினால் இரு வழிப்பாதையானது முற்றிலும் தடைபட்டு ஒரு வழிப் பாதையில் உயிர்பலி அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் நிறைந்த  சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
அது சமயம்,தகவல் தொடர்புத் துறையின் ஊராட்சிகள் தோறும் இணையம் எனும் சிறப்பான திட்டத்திற்காக, இத்துறை சார்ந்த அலுவலர்களின் அலட்சியப் பணியானது எல்கைமீறி தொடர்ந்து வருவதை கவனத்தில் கொண்டு பொதுமக்களுக்கு உயிர்ப்பலி அச்சுறுத்தல், மற்றும் குடிநீர் தேவை உள்ளிட்ட சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் சிறப்பான திட்டம் சார்ந்த இப்பணியானது தொடர வேண்டுமென “போலீஸ் பொதுமக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினர்” மக்களின் சிரமத்தை போக்க வேண்டி, தகவல்தொடர்பு துறையின் அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களின் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர்.