Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கெட்ட கொழுப்பை கரைக்கும் பிரிஞ்சி இலை தண்ணீர்! இதை எவ்வாறு தயார் செய்வது?

#image_title

கெட்ட கொழுப்பை கரைக்கும் பிரிஞ்சி இலை தண்ணீர்! இதை எவ்வாறு தயார் செய்வது?

நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும் பிரிஞ்சி இலைத் தண்ணீரை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பதனால் தான் உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் தான் காரணம். சில உணவு வகைகளில் நமக்கு பிடித்த சுவையும் அதே போல தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளும் இருக்கும். அதைத் தான் நாம் அதிகம் விரும்பி உண்போம்.

இதனால் நம் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் சேர்ந்து உடல் எடையும் அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றது. இந்த உடல் எடை அதிகரித்தால் நமக்கு பல நோய்கள் ஏற்படும். இதய நோய் முதல் அனைத்து நோய்களும் உருவாகும். இதை தடுக்க நாம் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற வேண்டும். அதற்கு உதவும் ஒரு சிறப்பான பொருள் பிரியாணி இலை என்று அழைக்கப்படும் பிரிஞ்சி இலை தான்.

இந்த பிரிஞ்சி இலையில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளது. பிரிஞ்சி இலையை பெரும்பாலும் உணவில் வாசனைக்காக பயன்படுத்துவார்கள். அதே போல இதை மருந்தாகவும் பயன்படுத்தலாம். பிரிஞ்சி இலையை நாம் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம்.

பிரிஞ்சு இலையில் விட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது. பிரிஞ்சி இலையை நாம் மருந்தாக பயன்படுத்தும் பொழுது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இந்த பிரிஞ்சி இலையை பயன்படுத்தி கெட்ட கொழுப்புகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பிரிஞ்சி இலையை பயன்படுத்தும் முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் பத்து பிரிஞ்சி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதை ஆறவிட்டு இறுதியாக இதில் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்கு கலந்துவிட்டு தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து கெட்ட கொழுப்புகளும் கரைந்து வெளியேறி விடும். மேலும் செரிமானமும் மேம்படும்.

Exit mobile version