லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

0
132

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதியின் குறுக்கே அமைந்த பாலத்தில் திடீரென ஒரு மர்ம நபர் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபரின் கத்திக்குத்து சம்பவத்தால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய மர்ம நபர்களை மடக்கிப்பிடித்து அவருடன் மல்லுக்கட்டினார். இந்த சம்பவத்தால் பாலத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

லண்டன் பாலத்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை கத்தியால் குத்திக் கொண்டிருக்கும் தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு வந்தனர். அப்போது அந்த மர்ம மனிதனும் இளைஞர் ஒருவரரும் மல்லுக்கட்டி கொண்டிருந்ததை பார்த்த போலீசார், சரியாக மர்ம நபரை சுட்டுக் கொன்று இளைஞரை மீட்டனர்

சுட்டுக்கொல்லப்பட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சரியான நேரத்தில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பொதுமக்களையும் மர்ம நபரை பிடிக்க முயன்ற இளைஞரையும் காப்பாற்றிய பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவிப்பதாக இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்