குடும்ப அட்டை வைத்திருக்க கூடிய அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. அதன்படி ரேஷன் பொருட்களை அதாவது சர்க்கரை எண்ணை பருப்பு போன்றவற்றை வெளி சந்தைகளில் விற்பனை செய்வது தவறான செயல் என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இது குறித்த தகவல்கள் பரப்பப்பட்டு வரும் பொழுதிலும், சமீப காலத்தில் நாகை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் பொருட்களை கடத்துதல் பதுக்குதல் மற்றும் விற்பனை செய்தால் போன்ற குற்றங்களின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த குற்றவாளிகளுக்கு 1955 ஆம் ஆண்டு இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் பிரிவு 6(அ), மற்றும் 7ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பதாவது :-
தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய ரேஷன் பொருட்களான அரிசி பருப்பு கோதுமை மற்றும் சர்க்கரை என எதையும் பொது சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும் மீறினால் தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்ததோடு ரேஷன் கடைகளில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் உட்பட அனைவரும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய இந்த பொருட்களை கடத்தல் பதுக்குதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்களுடைய குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சமீபத்தில் நாகையில் தனியார் கல்லூரி ஒன்றில் 2700 கிலோ ரேஷன் அரிசி பருப்பு போன்றவை பதுக்கி வைக்கப்பட்டதை கண்டறிந்து அதற்கு காரணமான இரண்டு பேரை நாகை மாவட்டத்தில் இருக்கக்கூடிய குற்றவியல் போலீசார் கைது செய்த சம்பவம் குறித்தும் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதேபோன்று சம்பவம் ஒன்று திருச்சி மாவட்டத்திலும் நடைபெற்றிருக்கிறது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் பல மாவட்டங்களில் இது போன்று அத்தியாவசிய தேவை பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்து பதுக்கப்படுவதாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருப்பதாகவும் புகார்கள் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.