Broiler Chicken: நீங்கள் சாப்பிடும் பிராய்லர் சிக்கனின் நன்மை மற்றும் தீமை பற்றி தெரிஞ்சிக்கோங்க!!
நம்மில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி உண்ணும் அசைவ உணவுகளில் ஒன்று பிராய்லர் கோழி. மற்ற இறைச்சியை ஒப்பிடுகையில் இதன் விலை சற்று குறைவு. அதேசமயம் சுவையும் அதிகம் என்பதால் இதை மக்கள் வாங்கி சமைத்து உண்கிறார்கள். இதில் பிரியாணி, வறுவல், சில்லி, கிரேவி என்று பல உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.
அசைவ உணவகங்களில் இந்த பிராய்லர் உணவுகள் அதிகம் விற்கப்படுகிறது. நாம் விரும்பி உண்ணும் இந்த பிராய்லர் சிக்கனில் நன்மைகளும் இருக்கிறது. அதேபோல் தீமைகளும் இருக்கிறது. பொதுவாக நாட்டு கோழி வளர்ந்து அவற்றை உண்பதற்கு குறைந்தது 5 முதல் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த பிராய்லர் கோழி 12 வித கெமிக்கல்களை பயன்படுத்தி ஒரே மாதத்தில் எடை கூடி விற்கும் நிலைக்கு வந்து விடுகிறது.
பிராய்லர் கோழி உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமை என்னென்ன?
பிராய்லர் கோழி நன்மைகள்:-
*பிராய்லர் கோழியை எண்ணெய் பயன்படுத்தி வறுத்து உண்ணாமல் அதை அவித்து சாப்பிட்டால்உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து விடும். இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்கும்.
*நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை கோழிக்கறி வழங்குகிறது.
*சிக்கனில் அதிகப்படியான புரதம் நிறைந்து இருபதால் எலும்புகளை பாதிக்கக்கூடிய ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இதனால் எலும்புகள் ஆரோக்கியத்தை பெறுகிறது.
*சிக்கனில் வைட்டமின் பி12 மற்றும் கோலின் அதிகளவில் உள்ளன. இவை இரண்டும் நமக்கு நினைவாற்றலை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளாக உள்ளன.
*உடலில் ஏற்படும் இரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாட்டை சரி செய்ய சிக்கன் பெரிதும் உதவுகிறது.
பிராய்லர் கோழி தீமைகள்:-
*அதிகளவு பிராய்லர் கோழி சமைத்து உண்பதினால் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படும்.
*பிராய்லர் கோழி அதிகளவு கெட்ட கொழுப்பு கொண்டுள்ளதால் இவற்றை உண்பதினால் உடல் எடை எளிதில் கூடி விடும். உடல் பருமன் இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
*பிராய்லர் கோழி விரைவாக வளர அவற்றிற்கு செலுத்தப்படும் இராசயனங்கள் ஆண்களுக்கு விந்தணு பாதிப்பு, மலட்டு தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது.
*பிராய்லர் கோழியில் உள்ள அதிகப்படியான இரசாயனங்கள் பெண் பிள்ளைகள் சிறு வயதிலேயே பருவம் அடைந்து விடுகின்றனர்.
*இந்த கோழி இறைச்சி பெண்களுக்கு கருப்பை தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது.