சகோதரர்களே சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரீதம்! காம அரக்கர்களின் உச்சகட்ட செயல்!
தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பெற்ற அப்பாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் உடன்பிறந்த சகோதரர்கள் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தற்காலிகமாக அதிகரித்து வருகிறது.அவ்வாறு தற்பொழுது சகோதரர்களை சகோதரிகளை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தான் கிருஷ்ணன். இவருக்கு ராஜி மற்றும் சிங்காரவேல் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் வயது 45 தாண்டிவிட்டது. இவர்கள் இருவரும் வெளி ஊர்களுக்கு சென்று வேலை பார்த்து ஒரு ஆறு மாதங்கள் கழித்து சொந்த ஊர் திரும்பும் வழக்கம் உடையவர்கள். அவ்வாறு செல்லும் பொழுது ஆதரவற்ற ஒரு சிறுமியை அழைத்து வந்து சகோதரியாக வளர்த்து வந்தனர். தற்பொழுது அந்த வளர்ப்பு சகோதரிக்கு வயது 14 ஆகிறது. நாளடைவில் ராஜி மற்றும் சிங்காரவேல் கண்ணுக்கு அந்த சிறுமி சகோதரியாக தென்படவில்லை. அவர்கள் வெளியூருக்கு வேலை சென்று பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் இருவரும் அந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் அந்த சிறுமி உடலால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளார். இதனைப்பற்றி அந்த கிராமத்தில் உள்ள அக்கம்பக்கத்தினரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த கிராம மக்கள் இந்த குழந்தையின் நிலையை கண்டு குழந்தைகள் உதவிக்கரம் எண்ணுக்கு தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளனர். இந்த குழந்தை கூறிய வாக்கு மூலத்தை கொண்டு விருத்தாச்சலம் டிஎஸ்பி மோகன் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் கிராமத்திற்கு சென்ற சிறுமியை மீட்டனர்.
சிறுமியின் மீட்டது மட்டுமின்றி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது சகோதரர்களான ராஜீவ் சிங்காரவேல் ஆகியோரையும் கைது செய்தனர். தற்பொழுது அவர்கள் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். வளர்ப்பு சகோதரி தானே என்று நினைத்து பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.