இந்த பொடியை பயன்படுத்தி பல் துலக்கினால் பல் சொத்தை ஈறு வீக்கம் நொடியில் குணமாகும்!
பற்களில் ஏற்படக் கூடிய நோய்களை குணமாக்க மூலிகை பற்பொடி பெரிதும் உதவுகிறது.இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது என்ற விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)கிராம்பு – 20 கிராம்
2)திரிபலா பொடி – 20 கிராம்
3)கருவேலம்பட்டை பொடி – 20 கிராம்
4)சுருள்பட்டை – 20 கிராம்
5)வேப்பிலை – 1 கொத்து
6)இந்துப்பு – 1/2 தேக்கரண்டி
7)புதினா – 20 கிராம்
8)படிகாரப்பொடி – 10 கிராம்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 20 கிராம் கிராம்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் 20 கிராம் சுருள்பட்டையை மிதமான சூட்டில் வறுக்கவும்.பிறகு வேப்பிலை மற்றும் புதினா இலைகளை நன்கு உலர்ந்த நிலையில் எடுத்துக் கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் ஈரமின்றி நன்கு உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்து வைத்திருக்கும் சுருள்பட்டை,கிராம்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அதில் 20 கிராம் கருவேலம்பட்டை பொடி,20 கிராம் உலர்ந்த புதினா இலைகள்,ஒரு கொத்து உலர்ந்த வேப்பிலை,20 கிராம் திரிபலா பொடி,10 கிராம் படிகாரத் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இந்த பற்பொடியை ஒரு ஈரமில்லாத பாட்டிலில் கொட்டி சேமித்து வைக்கவும்.இந்த பொடியை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்து வந்தால் பல் சொத்தை,பல் கூச்சம்,பல் மஞ்சள் கறை உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
2)பெரிய நெல்லிக்காய் பொடி – 2 தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
4)வேப்பிலை பொடி – 2 தேக்கரண்டி
5)தான்றிக்காய் பொடி – 1 தேக்கரண்டி
6)கரு மிளகு பொடி – 1/4 தேக்கரண்டி
7)பட்டை பொடி – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு ஈரமில்லாத கிண்ணம் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஏலக்காய் பொடி,பெரிய நெல்லிக்காய் பொடி,மஞ்சள் கிழங்கு தூள்,வேப்பிலை பொடி,தான்றிக்காய் பொடி,கரு மிளகு பொடி மற்றும் பட்டை பொடி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.இந்த பற்பொடி அளவு 2 முதல் 3 வாரங்களுக்கு வரும்.இந்த பொடியை கொண்டு பற்களை துலக்கி வந்தால் பல் சொத்தை,பற்கூச்சம்,பல் கறை உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.