பிஎஸ்என்எல் நிறுவனமானது தன்னுடைய பயனர்களுக்கு செட்டாப் பாக்ஸ் இல்லாமல் இன்டர்நெட் மூலம் டிவி பார்க்கும் வசதியை பைபர் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் இதன் முதல் கட்டமாக இந்த சேவைகளை தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. அதன் பின்னரே நாடு முழுவதும் செயல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தரத்துடன் BSNL IFTV இன்டர்நெட் தற்போது ஆண்ட்ராய்டு டிவிகளில் மட்டுமே இயங்குகிறது. தனி செட் டாப் பாக்ஸ் தேவையில்லாமல் டிவி சேனல்களைப் பெற சந்தாதாரர்களை அனுமதிக்க FTTH திட்டமிட்டுள்ளது.
சில மாதங்களாகவே ஜியோ மற்றும் ஏர்டெல் விலை அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமானது பல அதிரடி ஆஃபர்களை தன்னுடைய பயனர்களுக்கு கொடுத்து வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் இவற்றின் விலை ஏற்றத்தால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது பிஎஸ்என்எல் பயனர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால் நாட்டின் பல பகுதிகளில் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் அதனை சரி செய்யும் பொருட்டு களத்தில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரிவுபடுத்த பிஎஸ்என்எல் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் வைஃபை ரோமிங் சேவையை தொடங்கியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு எளிதான சேவைகளை வழங்கும் நோக்கத்தில் இந்த ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவையை நாடு முழுவதும் கொண்டு வர பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.