Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பி..டி.எஸ் மற்றும் ஹைப் ஒப்பந்தம் 2025 வரை புதுப்பிக்கப்பட்டது!ஆர்மிக்கள் மகிழ்ச்சி!!!

#image_title

பி..டி.எஸ் மற்றும் ஹைப் ஒப்பந்தம் 2025 வரை புதுப்பிக்கப்பட்டது!ஆர்மிக்கள் மகிழ்ச்சி!!!

உலக புகழ்பெற்ற தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ் 2010ம் ஆண்டு ஹைப் என்ற சிறிய நிறுவனத்தின் கீழ் தங்களது இசைக்குழுவை துவங்கினர்.இந்த இசைக்குழுவில் கிம் நம்ஜூன்,கிம் சியோக் ஜின்.மின் யூங்கி,ஜங் ஹோசக்,பார்க் ஜீமின்,கிம் டேஹியாங்,ஜியான் ஜங்கூக் போன்ற ஏழுபேர் உள்ளனர்.இந்த குழுவின் தலைவர்  ஆர்எம் என அழைக்கப்படும் கிம் நம்ஜூன் ஆவார்.இவர்களது விசிறிகளை ஆர்மி என்று அழைப்பர்.

இக்குழுவின் சிறப்பே இவர்களது இசையின் உட்கருத்து தான் இவர்களது பாடல்கள் நம்மை நாமே காதலிக்க வேண்டும் என்ற உட்கருத்தை கொண்டிருக்கும்.இவ்வுலகம் எதிர்மறையான கருத்துக்களால் நிரம்பியுள்ளது. அவற்றிலிருந்து தனது விசிறிகளை வெளிக்கொண்டுவரும் வகையில் இவர்களது பாடல் இருக்கும்.எப்போதும் நேர்மறையான கருத்துக்களையே பரப்பும் வகையாக இவர்களது பாடல் அமைந்திருக்கும்.இந்நிலையில் சமீபமாக குழுவாக செயல்படாமல் தனித்தனியாக இசை அமைத்து வருகின்றனர்.இதனால் இக்குழுவை பிடிக்காத சிலர் இக்குழு பிரிந்து விட்டதாக செய்தி பரப்பி வந்தனர்.இதனை தெளிவாக்க இக்குழுவின் ஏழு பேருமே சேர்ந்து நேரலையில் வந்து இச்சந்தேகத்தினை தீர்த்து வைத்தனர்.

இந்நிலையில் இந்த குழுவின் தலைவரான ஆர்.எம் சில தினங்களுக்கு முன்பாக ஒரு புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்திருந்தார். அதில் ஹைப் மற்றும் பி.டி.எஸ் இடையிலான ஒப்பந்தம் 2025 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பி.டி.எஸ் மற்றும் ஆர்மி என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த செய்தி ஆர்மிக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Exit mobile version