Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கட்டிடம் இடிந்து விழுந்து 7 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு!

Building collapse kills 7 farmers

Building collapse kills 7 farmers

கட்டிடம் இடிந்து விழுந்து 7 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் என்னும் தேர் வீதியில் உள்ள தனியார் மின் சாதன விற்பனை கடைகளை இடித்து புதிதாக கடைகள் கட்டும் பணிகள் கடந்த மூன்று நாட்களாகவே நடந்து வருகின்றது.அதில் பாதி அளவில் கடைகள் இடிக்கப்பட்டு விட்டது மீதி பாதி கடைகளில் வேலை நடந்து கொண்டே வருகின்றது.அந்நிலையில் பாதி கடைகள் எடுக்கப்பட்ட இருந்த நிலையில் கடைகளில் அடியில் அந்தியூரில் வாரச் சந்தைக்கு பொருட்களை விற்க வந்தவர்கள் பர்கூர் என்னும் மலைப் பகுதியை சேர்ந்த 7 விவசாயிகள் அந்த கட்டிடத்தில் தங்களுடைய கலைப்புகளைப் போக்குவதற்காக படுத்து தூங்கி உள்ளார்கள்.

நேற்று நள்ளிரவில் திடீரென மீதி கடைகளின் கட்டிடம் இடிந்து அந்த விவசாயிகளின் மீது விழுந்தது இதில் ஏழு பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.இதில் 3 விவசாயிகள் மட்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் மூன்று பேர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு செல்லப்பட்டார்கள். ஒருவர் மட்டும் எந்த ஒரு காயங்களுமின்றி உயிர் தப்பியதாக விபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்தியூர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version