Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

#image_title

பள்ளியில் பயிலும் சிறுமிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது குண்டர் தடுப்பு சட்டம்!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் உட்கோட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கோவை ஆனைகட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (54) என்பவரை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட நபர் என உறுதி செய்ததை அடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அவ்வுத்தரவின்படி போக்சோ வழக்கு ஆறுமுகம் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை கோவை. மாவட்டத்தில் 4 போக்சோ குற்றவாளிகள் உட்பட 14 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version