Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் பம்கின் சீட்ஸ்!! தொடர்ந்து 21 நாட்களுக்கு மட்டும் எடுத்துக்கோங்க!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் விதைகளில் அதிக சத்துக்கள் நிறைந்த விதை பூசணி விதை தான்.இந்த விதை ஆண்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு அருமருந்தாக திகழ்கிறது.கடுமையான நோய் பாதிப்புகளையும் அலேக்காக குணப்படுத்தும் ஆற்றல் பூசணி விதைக்கு உண்டு.பூசணி விதை உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.ஆண்களின் விந்தணு குறைபாட்டு பிரச்சனையை இந்த பூசணி விதை சரி செய்ய உதவுகிறது.

ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு மருந்தாக பூசணிவிதை திகழ்கிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பூசணி விதைகளை வறுத்து சாப்பிட்டு வரலாம்.இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனைக்கு மருந்தாக திகழ்கிறது.

பூசணி விதை ஊட்டச்சத்துக்கள்:-

*புரதம்
*ஒமேகா 6 கொழுப்பு அமிலம்
*இரும்பு
*கால்சியம்
*வைட்டமின்
*நிறைவுறா கொழுப்பு அமிலம்
*பீட்டா கரோட்டின்

தேவையான பொருட்கள்:

1)பூசணி விதை – இரண்டு தேக்கரண்டி
2)பால் – ஒரு கிளாஸ்
3)நெய் – சில துளிகள்
4)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

**முதலில் வாணலியில் பூசணி விதையை போட்டு வாசனை வரும் வரை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

**பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் கெட்டியான பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

**அடுத்து அதில் சில துளிகள் நெய் சேர்த்து காய்ச்ச வேண்டும்.பிறகு வறுத்த பூசணி விதைகளை அரைத்து அந்த பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவிற்கு பனங்கற்கண்டு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

குறைவான விந்து வெளியேற்றப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பூசணி விதைப்பாலை தொடர்ந்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Exit mobile version