DIWALI- க்கு பட்டாசு வெடிக்க போறிங்களா? அப்போ இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வெடிங்க!!

0
83
Burst crackers for DIWALI? Then know all this and have a blast!!

தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவரது நினைவிற்கு வரும்.இந்நாளில் குழந்தைகள்,பெரியவர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.லட்சுமி வெடி,சங்கு சக்கரம்,மத்தாப்பு,அணுகுண்டு,ஊசி பட்டாசு,சரவெடி,ராக்கெட் என்று பல வகை பட்டாசுகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.இந்தாண்டு வேட்டையன்,துப்பாக்கி திரைப்படங்களின் பெயர்களில் பட்டாசு அறிமுகமாகி இருப்பதால் பட்டாசு விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

வருடத்தில் ஒரு நாள் பட்டாசு வெடிக்கிறோம் என்றாலும் இந்நாளில் அதிகளவு பட்டாசு வெடிக்கப்படுவதால் அதிலுள்ள இராசயனங்கள் காற்றில் கலந்து சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகிறது.இதனால் பசுமை பட்டாசுகளை மட்டுமே வாங்கி வெடிக்க வேண்டும்.காற்று மாசை கட்டுப்படுத்த தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை அரசு விதித்திருக்கிறது.காலை 6-7 மற்றும் இரவு 7-8 வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1)குடிசை மற்றும் எளிதில் பற்றும் அபாயம் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது.

2)பட்டாசு விற்கும் இடங்கள்,பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்கள்,நீர்நிலைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

3)பாட்டாசுகளை குவியலாக வைத்து ஒரே நேரத்தில் வெடிக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

4)பட்டாசு வெடிப்பதற்கு முன்னர் வாலியில் தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.பட்டாசு பாற்ற வைத்ததும் வெடிக்காமல் இருந்தால் அதன் மீது தண்ணீரை ஊற்றிவிடவும்.

5)பட்டாசு வெடிக்கவில்லை என்றால் கைகளிலில் எடுத்து பார்ப்பது அதன் அருகில் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

6)பட்டாசு வெடிப்பவர்கள் மற்றும் வேடிக்கைபார்ப்பார்கள் நைலான் துணி அணிவதை தவிர்க்க வேண்டும்.காட்டன் துணிகளை உடுத்தி பட்டாசு வெடிக்க வேண்டும்.இதனால் உடைகளில் தீப்பொறி பட்டால் அவை பரவுவது தவரிக்கப்படும்.

7)குழந்தைகளை பட்டாசு வெடிக்க ஊக்கப்படுத்தக் கூடாது.கை குழந்தைகளை வைத்துக் கொண்டு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.