Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலையில் சென்ற பேருந்தின் இரு சக்கரங்களும் கழன்று விபத்து 

சாலையில் சென்ற பேருந்தின் இரு சக்கரங்களும் கழன்று விபத்து

சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சாலையில் சென்றுச்கொண்டிருந்த அரசு பேருந்தின் இரண்டு டயர்களும் கழன்று விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தின் போது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 50 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பணிமனையிலிருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தின் 2 பின்பக்க டயர்களும் கழன்று சாலை நடுவே ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் போது அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகளுக்கும் எந்த விதமான உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை.

இது தொடர்பாக பணிமனையின் மேலாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் 2 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version