ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி! திருமணம் சம்பந்தமான பயணத்தில் நடந்த கோர சம்பவம்.!!

0
159

ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி! திருமணம் சம்பந்தமான பயணத்தில் நடந்த கோர சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆற்றில் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர்.

சுவாமி மாதோபூர் மாவட்டத்தில் திருமண நிகழ்வு சம்பந்தமாக, குடும்பத்தினர் மற்றும் மணமகனின் நண்பர்கள் உட்பட 40 பேர் பேருந்தில் பயணம் செய்தனர். நல்லபடியாக சென்று கொண்டிருந்த பேருந்து,

பூண்டி மாவட்டம் கோட்டா லால்சேட் என்னும் நெடுஞ்சாலையில் இருந்த பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே தண்ணீரில் விழுந்தது. பேருந்து தண்ணீரில் மூழ்கியதால் வெளியே வரமுடியாமல் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்தை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரமாக மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பாலத்தில் பக்கவாட்டு தடுப்பு சுவர் என்பதும் விபத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் சம்பந்தமான பயணத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.