Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரு மாநிலத்து அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து:! சீர்காழி அருகே பரபரப்பு!!

இரு மாநிலத்து அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து:! சீர்காழி அருகே பரபரப்பு!!

சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச்சாலையில் கோவில்பத்து என்னும் பகுதிக்கு அருகே நான்கு வழிச்சாலை விரிவாக்கம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் இதற்காக பாலம் கட்டும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சாலை குறுகியதாக உள்ள நிலையில்,சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தும்,புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த புதுச்சேரி அரசு பேருந்தும் ஒரே நேரத்தில் எதிர் எதிர் திசையில் கடக்க, முயன்ற போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு அரசு பேருந்துகளிலும் பயணித்த 18-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தன.இவர்கள் அனைவரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்தில் புதுச்சேரி அரசு பேருந்தானது அதிகளவில் சேதாரம் அடைந்துள்ளது.
அதாவது பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக நொறுங்கி சேதம் அடைந்துள்ளது.மேலும் குறுகிய சாலை என்பதால் விபத்து ஏற்பட்ட பகுதியில், 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மேலும் இந்த விபத்து குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version