Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

எகிப்தில் லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு !!அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து…

கொய்ரோ எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சோஹாக் மாகாணம் ஜுஹைனா மாவட்டத்திலிருந்து பயணிளை ஏற்றிக்கொண்டு பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அங்குள்ள அதிக வளைவு கொண்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் பேருந்து  சாலையில் தாறுமாறாக சென்றது. தறிக்கெட்டு ஓடிய பேருந்து  எதிர்திசையில் வந்து கொண்டிருந்த  லாரி மீது பயங்கரமாக மோதியது.அப்போது இரு விமானமும் ஒன்று சேர்ந்து நொறுங்குவது போல் சத்தம் ஏற்ப்பட்டது.இதில் அந்த  பேருந்து  அப்பளம்போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக  உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டனர். முன்னதாக கடந்த மாதம்  எகிப்தின் மினாயா மாகாணத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படிருந்த  லாரியின் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 23 பேர் பலியானார்கள் .மேலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள்.இந்த விபத்தல் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

Exit mobile version