Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!

#image_title

மீண்டும் ஒரு கொடூரம் 19 வயது சிறுமியை ஓடும் பஸ்ஸில் இரண்டு டிரைவர்கள் பலாத்காரம் செய்துள்ளது ஜெய்ப்பூர் ராஜஸ்தானில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ராஜஸ்தானின் கனோட்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டிசம்பர் 9-10 இரவு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது. ஜெய்ப்பூர் காவல்துறையின் கூற்றுப்படி, 22 வயதான ஆரிப் கான் என அடையாளம் காணப்பட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது குற்றவாளியான லலித் குமார் (24) தப்பி ஓடிவிட்டார்.

குற்றவாளியை கண்டுபிடிக்க பல நகரங்களுக்கு காவல்துறை குழுக்களை அனுப்பியுள்ளது என்று ஏசிபி (கனோடா) பூல் சந்திர மீனா கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு தனது மாமாவை சந்திப்பதற்காக சிறுமி சென்று கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பினர் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் மாமா தையல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார் அதனால் அந்த பெண் புறப்பட்டு சென்று உள்ளார்.

மேலும் சிறுமியுடன் பேசுகையில். கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு நபர்களும் அந்தச் சிறுமையிடம் டிரைவருக்கு தனியாக ஒதுக்கப்பட்ட கேபினுக்குள் உள்ள அறையில் சிறுமியை தூங்க சொன்னதாக கூறப்படுகின்றது.

இப்பொழுது பேருந்தில் உள்ள இசையின் ஒலியை அதிகமாக வைத்துள்ளனர். அப்பொழுதுதான் இந்த சிறுமியின் அலறல் சத்தம் வெளியே உள்ள மக்களுக்கு கேட்காத வண்ணம் இருக்கும் என்று நினைத்து இதை செய்துள்ளனர்.

சிறிது நேரத்தில் சந்தேகம் ஏற்படவே பேருந்தை நிறுத்த சொல்லியுள்ளனர் மக்கள். அங்கேயே கைகலப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு விரைந்தது போலீசாரின் வண்டி. பின் டிரைவரில் ஒருவனை போலீசார் கைது செய்தனர் என்றும், இன்னொருவர் குமார் என்பவர் தப்பித்து ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது.

Exit mobile version