கொரோனாவை தொடர்ந்து தமிழக மக்களுக்கு வரும் அடுத்த சோதனை! தமிழக அரசு ஆலோசனை

0
89

கொரோனாவை தொடர்ந்து தமிழக மக்களுக்கு வரும் அடுத்த சோதனை! தமிழக அரசு ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆம் கட்டமாக ஊரடங்கு மே 17 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற தொழில்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவங்கள் செயல்படுவது நிறுத்தப்பட்டதால் அரசு மற்றும் பொது மக்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து தமிழகத்திலும் நேற்று முதல் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, இது குடிமகன்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு தற்போதுள்ள ஊரடங்கால் அரசுக்கான வருவாய் குறைந்ததால் தான் இந்த நடவடிக்கை என்று காரணம் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் வருவாய் இழப்பை சரி செய்யும் வகையில் பேருந்து கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதுள்ள ஊரடங்குக்குப் பின் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள ஊரடங்குக்குப் பிறகு பாதி பயணிகளோடு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக பேருந்து கட்டணமும் உயர்த்துவது பற்றி அரசு முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.