Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!  

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!  

கல்வீச்சு சம்பவத்தால் இரவு நேரங்களில் கடலூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க பாதைக்காக வளையமாதேவி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணியின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்களை அழித்தும் நிலம் ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கப்பட்டன.

விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த கல்வீச்சு சம்பவத்தில் சுமார் 13 அரசு பஸ்களின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. கல்வீச்சில் பஸ்கள் சேதமடைந்ததால் இரவு நேரத்தில் கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டன. இந்த சம்பவங்களினால் மாவட்டத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் கல்வீச்சு சம்பவத்தால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. அனைத்து பேருந்துகளும் மீண்டும் பணிமனைக்கு திரும்பிய நிலையில் பேருந்து சேவை தொடங்கியுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அங்கு காலை முதலே அசாதாரணமான சூழலே நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிர படுத்தியுள்ளனர். அதேபோல் அரசு பஸ்களில் யாரேனும் சேதம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version