தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தொடங்கிய பேருந்து சேவை!

0
105

தமிழ்நாட்டில் நோய்தொற்று பரவலை இரண்டாவது அலை தாக்கத்தால் முதல் அலையை விடவும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதுவும் முதல் அலையில் சாதாரண பொது மக்களை பாதித்த இந்த வைரஸ் தொற்று இரண்டாவது அலையின் போது மிகப்பெரிய ஜாம்பவான்களை பலிவாங்கியது.இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள்.

ஆனாலும் இந்த நோய் தொற்றினை அவ்வளவு விரைவில் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது திமுக.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று தாக்கம் காரணமாக, கடந்த மாதம் பத்தாம் தேதி பேருந்து ரயில் போன்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. பாதிப்பு படிப்படியாக குறைந்து அதன் பின்னர் தளர்வுகள் கொடுக்கப்பட்ட போது குறைந்த அளவிலேயே தொடர்வண்டிகள் இயக்கப்பட்டன.

ஆனாலும் பேருந்து சேவைக்கு அரசு சார்பாக எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. சுயதொழில் செய்வோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லா செயல்பாடுகளையும் ஆரம்பித்துவிட்டதால் பேருந்துகள் இயங்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த சூழ்நிலையில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று பெரிய அளவில் கோரிக்கை எழ தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து பேருந்துகளை இயக்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர் குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். ஆனால் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிபுணர்கள் நோய் தொற்று பாதிப்பு குறைந்த இருக்கின்ற பகுதிகளில் தலைவர்கள் எதுவும் அறிவிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்கள். இதனை கருத்தில் வைத்துக் கொண்டு தமிழக அரசு பாதிப்பு வாரியாக மாவட்டங்களை மூன்று வகையாக பிரித்து விட்டது. தனித்தனியாக தளர்வுகளையும் வழங்கியது.

மூன்று வகையாகப் பிரிக்கப் பட்ட மாவட்டங்களில் மூன்றாவது வகையான மாவட்டத்தில் அதாவது சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மட்டும் பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி வழங்கியது தமிழக அரசு.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட புதிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கம் செய்யப்படுகின்றன. பஸ்களில் குளிர் சாதனவசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகள் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு நோய்த்தொற்று பரவல் நடவடிக்கையிலும் முறையாக செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ஆயிரத்து 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.