கிளாம்பாக்கத்திற்கு குட்பை.. கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயங்கும்..!!

0
810

koyambedu bus stand: சென்னையில் புதிதாக கட்டப்பட்டு சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்த பேருந்து நிலையம்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (kilambakkam bus stand). இது சென்னையில் உள்ள கூட்ட நெரிசலை தடுப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக இந்த பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு மக்களின் சேவைக்கு வந்தது.

ஆனால் இந்த பேருந்து நிலையம் வந்ததிலிருந்து பொதுமக்கள் பல இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள் என்று அவ்வப்போது தகவல் வெளியாகி கொண்டு தான் இருந்தது. அதன்படி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பேருந்துகள் முன்னதாக கோயம்பட்டிலிருந்து இயக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையிலிருந்து கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பணிபுரிந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் தொழிலாளர்களின் சிரமத்தை கருத்தில் காெண்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம்  கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து வசதிகளை செய்து கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

அதன்படி இனி திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் மே 23ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்திருந்தது. தினசரி திருவண்ணாமலைக்கு  கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும், காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக 11 பேருந்துகளுடன் கூடுதலபக 30 பேருந்துகள் என மொத்தம்85 பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கிளாம்பாக்கத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை மே 23 முதல்  கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பயணிகள் பேருந்துகளில் பயணிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: இப்போ துணை முதல்வர் அடுத்து CM.. பக்காவாக ரெடியாகும் உதயநிதி!! கோடிகளை அபேஸ் செய்ய முக்கிய பதவி!!