உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்!

0
114

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்!

ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு பல்வேறு தரவுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும்,மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சனிக்கிழமை இரவு காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் தெரிவித்தவாறு,
சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களுக்கு சுமார் 3000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
பேருந்துகள் இயக்கப்படாத நேரத்திலும் சாலை வரி செலுத்தும் படி,கட்டாயப் படுத்துகிறார்கள்.வருமானமே இல்லாத சூழலில் சாலை வரி கட்டுவது சாத்தியமில்லை என்பதால்,இதுதொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கானது வருகின்ற 25 ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக இருக்கின்றது.அன்றைய தினம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உயர்நீதிமன்றத்தின் வழக்கின் தீர்ப்பு வந்த பிறகுதான் ஆம்னி பேருந்துகள் இயக்குவது பற்றி நாங்கள் முடிவு செய்வோம்.

எனவே இன்று முதல்,அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில் எங்களை 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அரசு கூறுகின்றது.ஆனால் இதுபோன்று 50% பயணிகளுடன் நாங்கள் பேருந்துகளை இயக்கினால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும்,வருமானத்திற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் பயணிகள் வரமாட்டார்கள் என்றும்,அதே நேரத்தில் இன்சுரன்ஸ் கட்டுவது பைனான்ஸ் கட்டுவது போன்றவற்றில் காலநீட்டிப்பு வழங்கினால் இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.