வருகிற ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றின் தாக்கமாக தீவிர ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. தற்போதைக்கு ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்க படுவதால், அதன் பின்னர் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில், திங்கள்கிழமை முதல் பாதிப்புகள் குறைந்து வருகின்றது. அதனால் மாவட்டத்தில் மட்டும் நகர பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்து உள்ள மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்திற்கு உள்ளேயே நகரப் பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளது.
தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் பேருந்து இயக்கம் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழக அரசின் போக்குவரத்து துறை பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது அனைத்தும் பணிமனைகளில் உள்ள பேருந்துகள் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. முதல் வாரத்திற்கு 50% பஸ்கள் இயக்கப்படும் என்றும், அதன் பின்னர் தேவைக்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
மொத்தம் 24,000 ஊழியர்களில் 60 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. தினமும் பணிக்கு சென்று வரும் பொதுமக்கள் பேருந்துகள் இல்லாமல் அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோவில் சென்று வரும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே சாதாரண மக்களுக்காக உதவியாக இருக்கும் என்று அரசு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.
40 நாட்களுக்கு மாநகர பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.