Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இணையத்தில் வைரலாகும் வெண்ணெய் டீ!!! இதனால் தான் மாரடைப்பு வருகின்றது என்று பயனர்கள் கருத்து!!! 

#image_title

இணையத்தில் வைரலாகும் வெண்ணெய் டீ!!! இதனால் தான் மாரடைப்பு வருகின்றது என்று பயனர்கள் கருத்து!!!
முதியவர் ஒருவர் வெண்ணெய் பயன்படுத்தி டீ தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த வீட்டிலே பார்த்த பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்திய நாட்டில் வசிக்கும் மக்களின் மனதில் டீ என்று அழைக்கப்படும் தேநீர் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பலருக்கும் காலைப் பொழுது என்பது டீ குடித்தால்தான் தொடங்கும். அப்படிப்பட்ட டீ பல வகைகளில் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
பால் சேர்த்து பால் டீ, பால் சேர்க்காமல் டீ, மசாலா டீ, மூலிகை டீ என்று பல வகைகளில் டீ விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பரபரப்பான இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் டீ கடைகள் இருக்கின்றது. ஒவ்வொரு டீ கடையிலும் தயாரிக்கப்படும் டீயிலும் தனித்துவமான சுவை இருக்கும். அவ்வாறு தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வரும் வீடியோவில் முதியவர் ஒருவர் தயாரிக்கும் டீ வித்தியாசமாக இருக்கின்றது.
அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் டீ தயாரிப்பது போன்று அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதுவும் அந்த முதியவர் சாதாரணமாக டீ தயாரிக்கவில்லை. அந்த முதியவர் வெண்ணெயுடன் சேர்த்து டீ தயாரிப்பது போல காட்டப்பட்டு இருக்கின்றது.
அந்த முதியவர் பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து உருக்கி அத்துடன் பால், ரோஜா இதழ்கள் சேர்த்து குதிக்க வைக்கின்றார். அதன் பின்னர் டீ தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் பாதாம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கின்றார். டீ நன்கு குதித்த பிறகு அதை குடிக்க தருகிறார்.
அதையடுத்து இந்த வீட்டிலே பகிர்ந்த அந்த நபர் முதியவரிடம் நீங்கள் எத்தனை காலம் இந்த வெண்ணெய் டீயை விற்பனை செய்து வருகிறீர்கள் என்று கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அந்த முதியவர் “இது 1945ம் ஆண்டு என்னுடைய தாத்தாவால் தொடங்கப்பட்ட பாரம்பரிய வியாபாரம் என்று பெருமையாக கூறினார்.
இந்த வித்தியாசமான வெண்ணெய் டீ வீடியோவை பார்த்த பயனர்கள் அனைவரும் தங்களது கேலியான கருத்துக்களையும் எதிர்மறையான கருத்துக்களையும், நேர்மறையான கருத்துக்களையும் கூட பதிவு செய்து வருகின்றனர்.
அதில் ஒரு பயனர் “இந்த வெண்ணெய் டீயை குடித்துதான் ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு சென்றார்கள்” என்றும் “இது போல வித்தியாசமான உணவுகளில் தான் சிறுவயதிலேயே மாரடைப்பு வருகின்றது” என்றும், இந்த டீயை குடித்துவிட்டு ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு ஓடிவிட்டனர்” என்றும், “தக்காளி மற்றும் வெங்காயம் மட்டும் சேர்க்க வேண்டியதுதான் பாக்கி என்றும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version