ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

0
85
#image_title

ஆளை சுண்டி இழுக்கும் “மோர் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

தயிர் சேர்க்கப்பட்ட உணவு உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும்.இதில் தயிர் சாதம்,தயிர் பச்சடி என்று பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் மோர் குழம்பு.இவை மிகவும் சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் உணவாகவும் இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தயிர் – 2 கப்

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*வெண்டைக்காய் – 5

*உப்பு – தேவையான அளவு

*துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி

*பச்சரிசி – 1 தேக்கரண்டி

*இஞ்சி – 1 துண்டு

*பச்சை மிளகாய் – 3

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*தேங்காய்(துருவியது) – 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

மோர் குழம்பு செய்ய முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும்.அதில் பச்சரிசி 1 தேக்கரண்டி,துவரம் பருப்பு 1 தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் ஊற்றி சுமார் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 3 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,1/2 தேக்கரண்டி சீரகம்,1 1/2 தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்க்கவும்.பின்னர் ஊறவைத்துள்ள பச்சரிசி மற்றும் பருப்பை சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் தயிர் மற்றும் 2 கப் நீர் சேர்த்து மோர் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து எடுத்து வைத்துள்ள வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் கடுகு, கறிவேப்பிலை,வரமிளகாய் உள்ளிட்டவற்றை சேர்த்து தாளிக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்க்கவும்.அடுத்து தயார் செய்து வைத்துள்ள தயிரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் மோர் குழம்பு சூடானதும் அதை இறக்கவும்.